நீச்சல் வீரர் லாரி மோதி | சம்பவ இடத்திலேயே பலி |
சென்னை அரும்பாக்கம் அடுத்த செனாய் நகர், ஜெயலட்சுமி காலனியை சேர்ந்தவர் பத்ரிநாத் இவரது மகன் பாலகிருஷ்ணன்/ 29 இவர் நீச்சல் வீரரான கடந்த 2010ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அமெரிக்காவில் பணிபுரிந்து வரும்
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்துள்ளார்.
நேற்று இரவு 11:00 மணி அளவில் தனது உறவினரை பார்த்துவிட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து அரும்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கலவை ஏற்றிச் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.
அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அந்த லாரியின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் இதற்கு காரணமான லாரி டிரைவர் செஞ்சி தாலுக்கா விழுப்புரம் சேர்ந்த சுப்பிரமணி/32 என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் சாலை விபத்தில் இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
நமது நிருபர்