Sat. Dec 21st, 2024

திருமங்கலத்தில் தண்ணீர் தொட்டிக்குள் ஆண் சடலம் | போலீசார் விசாரணை |

மே, 14-2019…,

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் சாய் கிருஷ்ணன் (34).இவர் உறவினர் ஸ்ரீராம் சரண் தாஜூடன் திருமங்கலம் பார்க் சாலையில் உள்ள ஓ.என்.ஜி.சி குடியிருப்புக்கு சென்றார். இன்று மதியம் 1:30 மணி அளவில் குடியிருப்பு வளாகத்தில் உள்ள சுமார் 10 அடி  கொண்ட தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தனர். சாய் கிருஷ்ணன் மட்டும் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்தார்.ஸ்ரீ ராம் சரண் வெளியே சென்று விட்டார்.  

மீண்டும் வந்த போது  தண்ணீர் தொட்டிக்குள் சாய் கிருஷ்ணன் மயங்கி கிடந்தார்.
108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பரிசோதித்த போது இறந்து விட்டதாக தெரிந்தது. உடனே ஸ்ரீராம் சரண் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…

நமது நிருபர்