Sat. Dec 21st, 2024

வழக்கறிஞரை தாக்கிய உதவி ஆய்வாளர் | பணியிடை நீக்கம் |

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கார்த்திக்கேயன் 13 ஆம் தேதி காலை சுமார் 11.30 மணிக்கு T-9 பட்டாபிராம் காவல் நிலையம் சென்று வழக்கு தொடர்பாக அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஜெகதீசனிடம் கேள்வி கேட்க அவர் சரியாக பதில் அளிக்காமல் இருந்ததாகவும் உடனே ஆய்வாளரிடம் கேள்வி கேட்டதற்கு வந்திருந்த அயனாவரத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கார்த்திக்கேயன் என்பவருக்கும் உதவி ஆய்வாளர் ஜெகதீசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி, இருவரும் தாக்கி கொண்ட சம்பவத்தில் இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் மீது இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டடது. மேலும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்றும் பாராமல் முதலில் உதவி ஆய்வாளர் தான் வழக்கறிஞரை தாக்கியுள்ளார் தற்காப்புக்கு கார்த்திகேயனும் ஆய்வாளரை தாக்கியுள்ளார்.

இது சம்மந்தமாக செய்தி ஊடகங்களில் பரவ தொடங்கிய நிலையில் இது தொடர்பாக மேற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் விஜயகுமாரி,
உதவி ஆய்வாளர் ஜெகதீசனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்…

நிருபர் ராம்