வாலிபரை கத்தியால் குத்திய இருவர் யார்..? | போலீஸ் திணறல் |
மே, 13-2019…,
அயனாவரம் பகுதியில்… நடுரோட்டில் கல்லூரி மாணவனை முகமூடி மூடிக்கொண்டு சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபர் யார்…? கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்…!
சென்னை, பெரவள்ளூரை சேர்ந்த தினேஷ்குமார். இவர் சென்னை பல்லாவரத்தில் தனியார் கல்லுரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இவர் தனது தந்தை முருகேசனுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 6ம் தேதி அன்று மாலை நுங்கம்பாக்கம் சென்று விட்டு திரும்பும்போது… அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் நுங்கு வாங்குவதற்காக ஓரமாக வாகனத்தை நிறுத்தி உள்ளார்.
பின்னர் வாகனத்தை விட்டு இறங்கி நிற்கும்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் தினேஷ்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தினார். அப்போது தினேஷ்குமார் கையால் தடுக்க முயற்சி செய்ததால்… இடது கை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் நின்றிருந்த அயனாவரத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஜான்சன் என்பவர் தடுக்க முயற்சிக்கும் பொழுது.. அவரை சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தயாராக நின்றிருந்த மற்றொருவருடன் தப்பி சென்றுள்ளார்.காயம் அடைந்த தினேஷ் குமார் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது தொடர்பாக கல்லூரி மாணவன் தினேஷ்குமார் தந்தை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த ஐ.சி.எப். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்யும்போது முகமூடி அணிந்த மர்ம நபர் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்த வாலிபருடன் வந்து கல்லூரி மாணவனை கத்தியால் குத்தியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவனை நடுரோட்டில்… முகமூடி அணிந்து சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபர் யார்? இவர் கூட இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் யார்? எதற்காக கல்லூரி மாணவனை சரமாரியாக கத்தியால் குத்தினார்கள். கல்லூரியில் பிரச்சனையா? இல்லை காதல் பிரச்சனையா? என பல கோணங்களில் ஐ.சி.எப் போலீசார் துப்பு கிடைக்காமல் திணறி வருகின்றனர்…
நமது நிருபர்