சென்னை மெட்ரோ ரயில்வே சிக்னல் கோளாறு |மூன்று மணி நேரம் பயணிகள் அவதி |
மே, 13-2019..,
நேற்று – மே 12, … சென்னை மெட்ரோ ரயில்வே சிக்னல் கோளாறால் மூன்று மணி நேரம் மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணியர் அவதியுற்றனர்.
சென்னை விமான நிலையம் – வண்ணார பேட்டை பரங்கிமலை – சென்ட்ரல் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் செல்லும் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் நேற்று மதியம் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, இயக்கத்தில் இருந்த மெட்ரோ ரயில்கள் அந்தந்த நிலையங்களில் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டன. இதனால், மதியம்,1:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணியர் காத்திருந்து அவதியுற்றனர். ஆனால், எம்.ஜி.ஆர். சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் வரை உள்ள ஒரு வழிப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது…
நமது நிருபர்