Sat. Dec 21st, 2024

காவலர் பற்றாக்குறை | அதிகரிக்கும் கொலை, கொள்ளை, வழிப்பறி…!!|

மே, 13-2019…,

சென்னை அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் காவலர் பற்றாக்குறையால் கொலை, வழிபறி கொள்ளை அதிகரிப்பு.

சென்னை அண்ணா நகர் காவல் மாவட்டத்தில் உள்ளடங்கிய அண்ணா நகர், திருமங்கலம், ஜெ.ஜெ நகர் , நொளம்பூர் , அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு , ஐசிஎப், வில்லிவாக்கம் காவல் நிலையங்களை உள்ளடங்கியது அண்ணா நகர் காவல் மாவட்டம். இது மூன்று உதவி ஆணையர்கள், 21 ஆய்வாளர்கள் ஒரு காவல் மாவட்டம் துணை ஆணையர் கொண்டது.

இந்த மாவட்டத்தில் தொடர் வழிப்பறி சம்பவம் செல் போன் பறிப்பு, வெட்டு சம்பவம் என தொடர் குற்ற சம்பவங்கள் அரங்கேறிய வருகின்றது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளியை பிடிக்க முடியாமல் காவல்துறை தினறி வருகின்றது. இந்நிலையில் காவல் நிலையத்தில் இருக்க கூடிய காவலர்கள்… பொது கூட்டம் அரசியல் பிரச்சாரம் என பல்வேறு கூட்டங்களுக்கு செல்வதால்… காவல் நிலையங்களில் காவலர்கள் குறைவாகவே இருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் புகார்களை விசாரிக்க மற்றும் குற்றவாளிகளை பிடிக்கவும் சிரமம் அதிகரித்து வருகின்றன. உதாரணமாக… சென்னை அயனாவரத்தில் பட்டப்பகலில் நடுரோட்டில் கல்லூரி மாணவனை கத்தியால் குத்திய மர்ம நபர்களை பிடிக்க முடியாமல் ஐ.சி.எப் போலீசார் திணறி வருகின்றனர். வில்லிவாக்கத்தில் கல்லூரி மாணவியை தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை பிடிக்காமல் திணறி வருகின்றனர். நொளம்பூர் பகுதியில் வழிப்பறிக் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகமாக வருவதால்… பொதுமக்கள் இதைப் பற்றி போலீசாரிடம் கூறினால்… போலீஸ் பற்றாக்குறையால் மெத்தனப் போக்கில் உள்ளன.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் தினமும், குறிப்பாக பெண்களிடம் கொள்ளை அடித்து செல்கிறார்கள். இதுவரை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டில் வழிப்பறி கொள்ளையர்கள் அதிகமாவதால் அவர்களே கட்டுப்படுத்த முடியாமல் கோயம்பேடு போலீசார் திணறி வருகின்றனர். அண்ணாநகர் பகுதியில் இரவு நேரங்களில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். அரும்பாக்கத்தில்
இளம் ரவுடிகள் பட்டாக்கத்தியுடன்
வலம் வருகின்றனர். இதுபோல் குற்ற சம்பவம் நடக்கும் இடத்தில் குற்றத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மேலும் அண்ணா நகர் காவல் சரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலத்திலும் பற்றாக்குறையாக உள்ள காவலர்கள் நிரப்ப வேண்டும் என்று சமூக ஆர்வலர்களுடைய கோரிக்கையாக உள்ளது…

நமது நிருபர்