Sat. Dec 21st, 2024

உரிய பாதுகாப்பு வசதி இல்லாத 6 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து |மீனம்பாக்கம் ஆர்.டி.ஓ நடவடிக்கை |

மே, 12-2019…,

மீனம்பாக்கம் ஆர்.டி.ஒ நடவடிக்கை… உரிய பாதுகாப்பு வசதி இல்லாத 6 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து.

பள்ளி வாகனங்களில் உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத 6 பள்ளி வாகனங்களுக்கான தகுதி சான்று ரத்து செய்து, மீனம்பாக்கம் ஆர்டிஓ நடவடிக்கை எடுத்துள்ளது

ஆலந்தூரில் உள்ள மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட… பரங்கிமலை ஆதம்பாக்கம், புழுதிவாக்கம், கீழ்க்கட்டளை, கொளப்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள 12க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இயங்கி வரும்.
135பஸ் மற்றும் வேன் போன்ற வாகனங்கள் ஆய்வு செய்வதற்காக ஆலந்தூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

அப்போது தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில்… மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி அவசரகால வழி, தீ அணைப்பான் கருவி உள்ளிட்ட 17 பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்க பட்டுள்ளவா என ஒவ்வொரு வாகனங்களாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய பாதுகாப்பு வசதிகள் செய்திராத 6 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது…

நமது நிருபர்