Sat. Dec 21st, 2024

பெற்றோர் திட்டியதால் அண்ணன் தம்பி இருவர் ATM card உடன் இருசக்கர வாகனத்தில் மாயம்..!

மே, 12-2019….,

பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவர்கள் மாயம் ஜெஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்களது தந்தை முகப்பேர் கிழக்கு ஜானகி கார்டன் சர்ச்ரோடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (43). இவருடைய மனைவி இறந்து விட்டார்.

இவருக்கு ஒரு பெண், இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகள் ரஷ்யாவில் படித்து வருகிறார். மகன் சந்தோஷ்(எ) பழனியப்பன் (16)… +1 படித்து வருகிறார். இரண்டாவது மகன் சஞ்சய் சரவணன் (14)…. 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக படிக்க வில்லை என்று நேற்று செந்தில்குமார் இரண்டு மகன்களையும் திட்டி உள்ளார். தந்தை திட்டியதால் மனமுடைந்த அண்ணன் சந்தோஷ், தம்பி சஞ்ஜய் இருவரும் செந்தில்குமார் ஏடிஎம் கார்டை எடுத்து கொண்டு வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு தலைமறைவாகி உள்ளனர்.

வெளியே சென்ற இரு மகன்கள் நேற்று இரவு வரை வீடு திரும்பவில்லை என்று செந்தில்குமார் ஜெஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் சுரேந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து பள்ளி மாணவர்கள் நண்பர்கள் வீட்டிற்கு போனார்களா? அல்லது உறவினர் வீட்டிற்கு போனார்களா? என பல கோணங்களில் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…

நமது நிருபர்