சென்னை, கோவை ATM ல் பல லட்சம் கொள்ளை | சிறை சென்ற ATM ஊழியரிடம் விசாரணை |
மே, 12-2019…,
அயனாவரம் , ஐ.சி.எப், ராஜமங்கலம் மற்றும் கோவையில் ஏ.டி.எம்-இல் பணம் நிரப்பும் நிறுவனத்தில் பணம் கையாடலில் கைது செய்த குற்றவாளியை ஐ.சி.எப் போலீசார் விசாரணை.
சென்னை செங்குன்றத்தை சேர்ந்தவர் ராஜா (30). இவர் 2017ல் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏடிஎம்-இல் ஊழியராக பணிபுரிந்தார். இவர் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி… சென்னை அயனாவரம் ஏ.டி.எம் இல் 8 லட்சம், ஐ.சி.எப் ஏ.டி.எம் இல் 9 லட்சம், ராஜமங்கலம் ஏ.டி.எம் இல் 9 லட்சம் கொள்ளை அடித்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.
இது குறித்து ஐ.சி எப் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். வழக்கு பதிவு செய்த ஐ.சி.எப் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ராஜா 2018ல் கோயம்புத்தூரில் உள்ள ஏ.டி.எம் இல் பணிபுரிந்தார். பின்பு 2019 ல் கோயம்புத்தூரில் உள்ள ஏ.டி.எம் இல் 56 லட்சம் கொள்ளையடித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கோயம்புத்தூர் போலீசார் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக நேற்று ஐ.சி.எப் போலீசார் கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் ராஜாவை கஸ்டடியில் விசாரிக்க கேட்டிருந்தனர். ராஜாவை 4 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழியர் ராஜாவை 4 நாட்கள் காவலில் எடுத்து சென்னை ஐ.சி.எப் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்