Fri. Dec 20th, 2024

தூங்கிய கல்லூரி மாணவி | படம் பிடித்தவரை | காப்பாற்றும் காவல்துறை |

மே, 12-2019…,

சென்னை, எத்திராஜ் கல்லூரியில்.. BA இரண்டாம் ஆண்டு படிக்கும் லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவிக்கு அம்மை வந்ததாள்… அவரது வீட்டில் அறைகுறை ஆடையில் படுத்திருக்கிறார். உடல் நிலை சரியில்லாத நிலையில்.. சரிவர தூக்கம் வராமல் இருந்த நிலையில் அவர் இருக்கும் பொழுது… அவரது படுக்கைக்கு மேல் உள்ள ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர்… அவரது உடலை படம் பிடித்துக்கொண்டு இருந்திருக்கிறார். இதை அறிந்த அப்பெண் கூச்சலிட.. அந்த வாலிபர் தப்பி ஓட முயற்சித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து லட்சுமி.. அந்த நபரிடம் இருந்து செல்போனை பிடுங்கிவிட்டார். அதன் பின் சென்னை, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் தன்னை செல்போனில் வீடியோ எடுத்த நபர் மீது 10.5.2019 அன்று புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட அங்குள்ள உதவி ஆய்வாளர் ஒருவர்… உங்களது புகாரை நாங்கள் பதிவு செய்து கொண்டோம் அதன் பதிவு எண் 428. அதன் படி நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்… நீங்கள் புறப்படுங்கள் என கூறி அனுப்பி வைத்து விட்டு, இதுவரையில் அந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் வீடியோ எடுத்த நபர் வீட்டிலேயே அமர்ந்து கொண்டு ஜாலியாக இருப்பதை கண்ட அப்பெண் அதிர்ச்சி அடைந்தது இல்லாமல்…, காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற காரணத்தால் மனஉளைச்சல் அடைந்து விஷ மருந்து குடித்துள்ளார்.. தற்போது அந்த பெண் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்கு பெற்று வருகின்றார் என்கிறார் அவரது தந்தை ஏழுமலை. தனது பெண்ணை செல் போனில் படம் எடுத்த நபரை காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்…

இது போன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வகை செய்யாமல் தவறு செய்த வாலிபரை சுதந்திரமாக பறக்க விட்ட மர்மம் என்ன? மாநகர காவல் ஆணையர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

நமது நிருபர்