மது போதையில் யார் பெரியவர் என | டாஸ்மாக் பாருக்குள் நடந்த கொலை |
மே, 10-2019…,
ஈரோடு கொல்லம்பாளையம் நாடார்மேடு, நேரு வீதியை சேர்ந்த மஞ்சுநாதன் (37) பெயிண்டர் நேற்று முன்தினம் மாலை நாடார்மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்த தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது மது போதையில் ஒருவருக்கு ஒருவர் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். இதில் அவரது நண்பர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுநாதனின் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மஞ்சுநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து சூரம்பட்டி போலீசார் டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்த மஞ்சுநாதனை அவரது நண்பர் கத்தியால் குத்தும் காட்சியை வைத்து வழக்கு பதிவு செய்து ஈரோடு விக்னேஷ் நகரை சேர்ந்த செந்தில்குமார் (42) கைது செய்து விசாரித்ததில் சதாசிவம் (45), தாமோதரன் (45), ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த முருகன் என்பரையும் கைது செய்தனர்.
அதன்பின் முதல்கட்ட விசாரணையில்.. நண்பர்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் தான் கொலைக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்…
நிருபர் சண்முகசுந்தரம்