பணம் கேட்டு | பிரியாணி கடைக்காரரை கத்தியால் கிழித்தேன் |
அமைந்தகரை கஜலட்சுமி காலணியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சிவகுமார்/50 இவருடைய மனைவி தாரா அமைந்தகரை பகுதியில் தள்ளு வண்டியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுனர் படையப்பா (எ) வெங்கடேசன்/35 இவர் நேற்று பிரியாணி கடையில் மாமூல் கேட்க சென்றார்.வழக்கமான முறையில் பிரியாணி கடையில் ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார் மனைவி தாரா இருப்பது வழக்கம் சிவகுமார் மனைவி தாரா என்பவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கடையில் கணவர் சிவகுமார் இருந்து உள்ளார். அங்கு சென்ற ஆட்டோ ஓட்டுனர் படையப்பா (எ) வெங்கடேசன் சிவக்குமாரிடம் மாமூல் கேட்டு உள்ளார். அதற்கு சிவகுமார் தர முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட திடீரென்று படையப்பா மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து சிவகுமார் வாயை கத்தியால் கிழித்தார் உடனே வலியில் அவர் கத்தியதால் பயந்து போன ஆட்டோ ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். உடனே அருகே இருந்தவர்கள் ஓடிவந்து சிவக்குமாரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்றுவந்த சிவகுமார் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் வழக்கு பதிவு செய்த அமைந்தகரை காவல் ஆய்வாளர் தலைமறைவாக இருந்த படையப்பா (எ) வெங்கடேசன் என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் கத்தியைக் காட்டி சிவக்குமாரை மிரட்டி மாமூல் கேட்டேன் மாமூல் தரவில்லை என்ற ஆத்திரத்தில் சிவக்குமார் வாயை கிழித்தேன் என ஒப்புக்கொண்ட அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்…
நமது நிருபர்