பாதுகாப்பு இல்லாத பறக்கும் ரயில் நிலைய வாகன காப்பகம்…
மே, 10-2019..,
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நிறுத்த இருசக்கர வாகனங்களை காக்க.. வாகனம் காப்பகம், மற்றும் ஆட்கள் இல்லாததால்… அங்கு வாகனங்களை நிறுத்தும் உரிமையாளர்கள் (பொதுமக்கள்) வாகனகங்கள் காணாமல் போய்விடுமோ என்ற அச்சத்தோடு நிறுத்துகின்றனர்.
அங்கு வெகு ஆண்டுகளாக இயங்கி வந்த வாகன காப்பகத்தில் ஒப்பந்தம் முடிவடைந்தும்.. இன்னும் புதிப்பித்து நிறுத்தும் இருசக்கர வாகனங்களை காக்க நடவடிக்கை எடுக்காதத்தால் 100க்கும் அதிகமான வாகன உரிமையாளர்கள் அச்சத்தோடு வாகனங்களை தினம் தினம் நிறுத்தி செல்கின்றனர்.
வாகனங்கள் நிறுத்தும் மத்திய கைலாஷ் பறக்கும் ரயில் நிலையத்தில் 200 க்கும் அதிகமான வாகனங்கள் தினம் நிறுத்தப்படுகின்றன. இங்கு கண்காணிப்பு கேமராவும் இல்லாமல், வாடகை செலுத்தி வாகனங்களை பார்த்துக்கொள்ள ஆட்களும் இல்லாததால்… வாகன உரிமையாளர்கள் தினம் அச்சத்தோடு வாகனங்களை நிறுத்திசெல்கின்றனர்.
எனவே உடனடியாக வாகன காப்பகம் அமைத்து அங்கு நிறுத்தும் வாகனங்களை காக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பது வாகன உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது…
நமது நிருபர்