Mon. Dec 30th, 2024

சென்னை – நடிகர் பார்த்திபன் மீது காவல் நிலையத்தில் புகார்

மே, 10-2019…,

நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கி அவமானப்படுத்தியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கூறி அவரது உதவியாளர் ஜெயங்கொண்டான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரும் இயக்குனருமான பார்த்திபனிடம் சென்னை கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயங்கொண்டான் என்பவர் உதவியாளராக சில ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நடிகர் பார்த்திபன் தன்னை பொய்யான ஒரு காரணத்தைக் கூறி தாக்கி அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி ஜெயங்கொண்டான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயங்கொண்டான், கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் பார்த்திபனிடம் தான் உதவியாளராக பணியாற்றி வந்ததாக தெரிவித்தார்.

மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் பார்த்திபன் தனது வீட்டில் நடந்த ஒரு திருட்டை காரணம் காட்டி தன்னை பணியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் எனினும் தனக்கு என்றாவது பாடலாசிரியர் வாய்ப்பு அளிப்பார் என்ற நம்பிக்கையில் அவருடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள Four Frames ஸ்டுடியோவிற்கு வந்த பார்த்திபன், அங்கிருந்த தன்னை பொய்யான ஒரு காரணத்தைக் கூறி தாக்கியதோடு அவமானப்படுத்தி அனுப்பி விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், தன்னை தாக்கிய பார்த்திபன் மீது நடவடிக்கை எடுத்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

( பேட்டி – ஜெயங்கொண்டான் – நடிகர் பார்த்திபன் மீது புகார் அளித்த நபர்)