Sat. Jan 4th, 2025

சட்ட கல்லூரி மாணவர் கடத்தல் வழக்கில் 5 பேர் கைது..

மே, 10-2019..,

சட்ட கல்லூரி மாணவர் கடத்தல் வழக்கில் 5 பேர் கைது..

சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் சாலமன், சட்டக் கல்லூரி மாணவரான இவருக்கும் வெட்டுவாங்கன்னி பகுதியைச் சேர்ந்த முஹம்மது ஆரிப் என்பவரது மனைவியான பிரியா என்ற பத்மாவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரியா அவரது கணவர் முகமது ஆரிப் உடன் சண்டை போட்டுவிட்டு தனது அம்மா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவரது அம்மா வீட்டுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. உடனே அதிர்ச்சி அடைந்த முகமது ஆரிப் பிரியாவை பல இடங்களில் தேடி வந்துள்ளார். இந்த நிலையில் பிரியாவுக்கும், சட்டக்கல்லூரி மாணவன் சாலமனுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது முகமது ஆரிப்க்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இருவரையும் அவரது குடும்பத்தார்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் முகமது ஆரிப்பும், அவரது நண்பர்களும் சேர்ந்து சாலமனை கடத்தி சென்று அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாலமனின் தந்தை நீலாங்கரை காவல் நிலையத்தில் தனது மகன் கடத்தப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில், தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சாலமனை கடத்திய கும்பல் அண்ணாநகர் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அண்ணாநகர் போலீசார் உதவியுடன் அவர்களை சுற்றிவளைத்து பிடித்த நீலாங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரியாவின் கணவர் முஹம்மது ஆரிப் மற்றும் அவரின் நண்பர்களான கதிர்வேல், விக்னேஷ், பரத், மற்றும் மஞ்சுளா ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…

நமது நிருபர்

வழக்கில் 5 பேர் கைது