தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மதிக்காத தமிழக ஆளுநர்…!!!
மே, 10-2019..,
ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க மாநில தகவல் ஆணையத்திற்கு வெல்ஃபேர் கட்சி (புகார்) மேல்மூறையீடு….
இந்திய அரசியல் சாசனம் ஷரத்து 161-ன் கீழ் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும்… கவர்னர் அலுவலகம் இன்னும் முடிவு எடுக்காதது ஏன்..? என்ற கேள்வியுடனும்.
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்பட்ட கைதிகளை எந்த அடிப்படையில் விடுதலை செய்தீர்கள்.? என்ற கேள்வியுடனும்.
தமிழக சிறையில் உள்ள 20 ஆண்டுகளை கடந்த முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையில் ஏன் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.? உள்ளிட்ட கேள்விகளுடனும்… கடந்த 22.11.2018 அன்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக ஆளுநர் அலுவலகத்தில் தகவலை கோரியிருந்தோம். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 30 நாட்களுக்குள்ளாக கேட்கக் கூடிய தகவல்களை சம்பந்தப்பட்ட அலுவலகம் தரவேண்டும்.
இதற்கிடையில் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் வராததால் கடந்த 19.02.2019 அன்று முதல் மேல்முறையீட்டு மனுவை தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 19(1) ன் கீழ் முதல் மேல்முறையீட்டு மனுவே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியிருந்தோம்.
ஆனால் அதற்கும் ஆளுநர் மாளிகையில் இருந்து இந்நாள் வரை எந்த பதிலும் வராததால்… மாநில தகவல் ஆணையத்திற்கு தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 19(3) ன் கீழ் மேல்முறையீட்டுக்கு சென்றுள்ளோம். இது தகவல் தர மறுத்தல் தண்டனை பிரிவு 20-ன் கீழ்… தகவல் தர மறுத்தாலின் அடிப்படையில் ரூ 25000 அபராதம் & ஒழுங்கு நடவடிக்கை உள்ளாகும்.
சட்டத்தை மதிக்க வேண்டிய ஆளுநரே சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டால்..!! நாட்டின் சாதாரண குடிமக்கள் எவ்வாறு சட்டத்தை மதிப்பர்கள்..? என்ற கேள்வியே இங்கு பிரதானமாக எழுகிறது….