Sat. Dec 21st, 2024

மூடாமல் கிடக்கும் மழைநீர் கால்வாயில் மாட்டிக் கொண்ட பசுமாடு…!

மே, 08 – 2019…, கோயம்பேடு பகுதியில், பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சென்னை கோயம்பேட்டிலிருந்து விருகம்பாக்கம் செல்லும் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு ஆங்காங்கே மூடிகள் போட்டு மூடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று அந்த மழைநீர் கால்வாயில் தவறி விழுந்தது. கால்வாய்க்குள் விழுந்த மாடு மேலே வரமுடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் கோயம்பேடு தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மாட்டின் மீது கயிறை கட்டி… நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு லாவகமாக மழைநீர் கால்வாயில் இருந்து அந்த மாட்டை வெளியே எடுத்தனர்.

இதையடுத்து அந்த மாடு அங்கிருந்து சென்றது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு மாடு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஆங்காங்கே திறந்து உள்ள மழைநீர் கால்வாய் பகுதிகளை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…

நமது நிருபர்