Fri. Dec 20th, 2024

ஊரை அடித்து உலையில் போட்டு ஓட்டு கேட்ட? | ஆறுமுக நயினாரை பார்த்து ஒட்டப்பிடாரம் மக்கள் அலறி அடித்து ஓட்டமாம் |

தூத்துக்குடி முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மன் P.A ஆறுமுக நயினார் இடைத் தேர்தல் நடக்கும் ஒட்டப்பிடராம் தொகுதி பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டப்பிடராம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகன் வேட்புமனு தாக்கல் செய்த போது, விதிமுறைகளை மீறி நடந்தக்கொண்டார் ஆறுமுக நயினார். காவல்துறை அதிகாரிகள் விதிமுறைகள் மீறும் போது தடுத்தார்கள். அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் நான் தான் தமிழகத்தின் நிழல் முதல்வர், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கு போன் செய்யட்டுமா என்று அன்பாக மிரட்டியதும் அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் நமக்கேன் வம்பு..பெரிய இடத்து விவகாரம் என்று ஒதுங்கி விட்டார்கள். தூத்துக்குடி நகரம் வார்டு -4, பிளாக் -25ல் 3631/1, 3631/2, 3632/2, 3631/4 ஆகிய சர்வே எண் நிலங்களை போலி பத்திரம் மூலம் ஆக்கிரமித்து, வருவாய்த்துறை அதிகாரிகளை மிரட்டி, ஆறுமுகநயினார், ராஜலட்சுமி, ஆறுமுக கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஒன்பது நபர்கள் பெயரில் பட்டா பெற்றுள்ளார். 3631/2 – 06121.0 ச.மீ நிலம் பு.சு.நத்தம் மற்றும் 3631/4- 00139.0 ச.மீ நிலம் நகராட்சி ஆணையர் பெயரில் உள்ள நிலமாகும். இப்படி அரசு நிலத்தை போலி பத்திரங்கள் மூலம் ஆக்கிரமித்து, பட்டா பெற்றது தொடர்பாக 8.3.2018ல் ஆறுமுக நயினார் மற்றும் போலி பத்திரங்களுக்கு பட்டா கொடுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஊழல் மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு (மக்கள் செய்தி மையம்) புகார் அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க, ஊழல் மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் இது வரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆறுமுக நயினார் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்து, போலி பத்திரங்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யும், போலி பத்திரங்களுக்கு பட்டா கொடுத்த வருவாய்த்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யவும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர மக்கள் செய்தி மையம் முடிவு செய்துள்ளது. போலி பத்திரங்கள் மூலம் அரசு நிலத்தை ஆக்கிரமித்த ஆறுமுக நயினார் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்யும், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு அளிக்கலாமா என்று ஒட்டப்பிடராம் மக்கள் கேள்வி கேட்கிறார்கள். முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ சண்முகநாதன், தன் இரண்டாவது மனைவி ஆஷா பெயரில் ஸ்ரீவைகுண்டம் பெருங்குளத்தில் 28/1ல் உள்ள குளத்தை ஆக்கிரமித்து, பீம் போட்டுள்ளார். குளம் ஆக்கிரமிப்பாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏவும் இரட்டை இலைக்குதான் வாக்கு கேட்கிறார்…

மே 23ஆம் தேதி ஒட்டுமொத்த ஒட்டப்பிடராம் தொகுதி மக்களின் மனநிலை பற்றி தெரியவரும்….

நன்றி
மக்கள் செய்தி மையம்

ச.விமலேஷ்வரன்