Fri. Dec 20th, 2024

நடுரோட்டில் மாணவனுக்கு கத்தி குத்து | தடுக்க வந்தவருக்கும் அதே…? |

மே, 06 -2019..,

சென்னை ICF பகுதியில் நடுரோட்டில் கல்லூரி மாணவனுக்கு சரமாரியாக கத்தி குத்து தடுக்க வந்த ஊழியருக்கும் கத்தி குத்து அருகில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்.

சென்னை பெரவள்ளூரை சேர்ந்த தினேஷ்குமார் இவர் சென்னை பல்லாவரத்தில் தனியார் கல்லுரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறார் இவர் தனது தந்தை முருகேசனுடன் இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை நுங்கம்பாக்கம் சென்று விட்டு திரும்பும்போது அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் நுங்கு வாங்குவதற்காக ஓரமாக வாகனத்தை நிறுத்தி உள்ளார் பின்னர் வாகனத்தை விட்டு இறங்கி நிற்கும்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் தினேஷ்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

தினேஷ்குமார் கையால் தடுக்க முயற்சி செய்ததால் இடது கை மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது அருகில் நின்றிருந்த அயனாவரத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஜான்சன் என்பவர் தடுக்கும் ஜான்சனுக்கும் சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தயாராக நின்றிருந்த மற்றொருவருடன் தப்பி சென்றுள்ளார் காயம் அடைந்த தினேஷ் குமார் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது தொடர்பாக கல்லூரி மாணவன் தினேஷ்குமார் தந்தை ஐசிஎப் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.

வழக்கு பதிவு செய்த ஐசிஎப்.போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மக்கள் நிறைந்த ஐசிஎப் பகுதியில் நடுரோட்டில் கல்லூரி மாணவனை சரமாரியாக கத்தியால் குத்தியதால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது…

நமது நிருபர்