Sun. Oct 6th, 2024

குத்தாலம் அருகே இருவர் மீது | துப்பாக்கிச் சூடு நடத்திய மெய்க்காவலர் கைது |

திருவாவடுதுறை ஆதீனம் சந்நிதானம் அவர்களின் மெய்க்காவலர் கைது

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை மயிலாடுதுறை அருகே உள்ள தொன்மை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தில் மடத்தின் 24-வது குருமகா சந்நிதானமாக உள்ள ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் மெய்க்காவலராக நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த ஜெகன்ராஜா என்பவர் காவல் துறையின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் திருவாவடுதுறை கடைவீதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வரும் பெண்மணி ஒருவரிடம் அண்மைக்காலமாக தகாத முறையில் பேசிவந்துள்ளார் இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் அக்கடைக்கு வந்த காவலர் ஜெகன்ராஜா அப்பெண்மணியிடம் வந்து பேசியுள்ளார். இதைக்கண்ட திருவாவடுதுறை, மேலவீதியைச் சேர்ந்த மதி/46 பெண்ணின் கடையில் காவலர் ஜெகன்ராஜா சென்று பேசுவதை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார் இதைக்கண்ட ஜெகன்ராஜா மதியின் செல்போனை பிடுங்கிக்கொண்டு விரட்டியுள்ளார் மதி தனது செல்போனை திரும்பத்தருமாறு கேட்டு ஜெகன்ராஜா மறுக்கவே மதி உருட்டுக்கட்டையை எடுத்து வந்து செல்போனை தருமாறு கேட்டுள்ளார் இதனால் கோபமடைந்த காவலர் ஜெகன்ராஜா மதியின் இடது காலில் ஆதீனத்தின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார் இதைக்கண்ட அக்கிராம நாட்டாமை செல்வராஜ்/40 தட்டிக்கேட்கவே அவரது காலிலும் துப்பாக்கியால் சுட்டுள்ளார் இதில் இவரது இடது காலில் பாய்ந்த குண்டு காலை துளைத்துக்கொண்டு வலது காலில் பாய்ந்து, செல்வராஜிக்கு இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், திருவாவடுதுறை சப்பாணித் தெருவைச் சேர்ந்த மதிவாணன்/54 என்பவரையும் துப்பாக்கியைக் கொண்டு தாக்கியுள்ளார் இதைத்தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டு அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள், காவலர் ஜெகன்ராஜாவை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது அவர் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார் காவலர் ஜெகன்ராஜாவின் இருசக்கர வாகனத்தை கிராம மக்கள் தீயிட்டு கொளுத்தினர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மதி, செல்வராஜ் இருவரும் மயிலாடுதுறை பெரியார் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடனடியாக மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் தகவலறிந்த குத்தாலம் போலீசார் அப்பகுதியில் பதுங்கியிருந்த காவலர் ஜெகன்ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பதற்றத்தை தணிக்க திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் ஜெகன்ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்…

நமது நிருபர்