திருச்சி விமான நிலையத்தில் ரூ 66.25 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
மே, 06-2019…,
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது. இதில் வந்த பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த முருகேஷ் (34) என்பவர் தான் கொண்டு வந்த டிவி ஹேங்கரில் ரூபாய் 66.25 லட்சம் மதிப்புள்ள 2095 கிராம் தங்கத்தை தகடு வடிவில் செய்து மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்.. அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நமது நிருபர்…