முகப்பேரில் பவள பாறைகளை கடத்திய 2 பேரிடம் மத்திய வனகுற்றபிரிவு அதிகாரிகள் விசாரணை..
மே, 03-2019…
முகப்பேரில் பவள பாறைகளை கடத்திய
2 பேரிடம் மத்திய வனகுற்றபிரிவு அதிகாரிகள் விசாரணை
சென்னையில் அரிய வகை பவளப்பாறையை கடத்தி கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக மத்திய வனப் குற்றப்பிரிவு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மத்திய வன குற்றப்பிரிவு தென் மண்டல இயக்குனர் உமா தலைமையில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆலந்தூரில் உள்ள மீன் மார்க்கெட்டில் சோதனை நடத்தி அரிய வகை கடல்வாழ் பவளப்பாறைகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் முகப்பேரில் உள்ள மீன்கடையிலும் பவளப்பாறைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 28 கிலோ எடைக்கொண்ட இவற்றின் மதிப்பு 10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின்படி பவளப்பாறைகளை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி கள்ளத்தனமாக பவளப்பாறைகளை கடத்தப்பட்டு வருகிறது. பவளபாறைகளில் ஒட்டியுள்ள பாசி போன்ற நுண்ணுயிரினம் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பவளபாறைகளை கடத்தினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் இதனை வைத்திருந்த 2 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என தகவல்…
நமது நிருபர்