ஓடும் லாரியில் 3.3 லட்சம் மதிப்புள்ள பீடி கட்டுக்களை திருடியவர்கள் கைது…!!!
மே,03-2019….
விருதுநகரில் சரக்கு ஏற்றி செல்லும் லாரியில் இருந்து பீடி பண்டல்களை திருடி சென்ற கும்பல் கைது விருதுநகர் மாவட்டம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு லாரியில் பீடி பண்டல்களை எடுத்துக்கொண்டு செல்லும் பொழுது லாரியை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சிலர்… விருதுநகர் பைப்பாஸ் ரோட்டில் ஓடும் லாரியில் ஏறி சுமார் 3 லட்சத்தி 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பீடி பண்டல்களை நூதனமாக திருடி சென்று விட்டனர்.
இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர்கள் அன்புதாசன், காவலர்கள் பிரபு மற்றும் சிவக்குமார் ஆகியோர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோதும் மற்றும் லாரி டிரைவர் கூறிய வாகனத்தின் அங்க அடையாளங்களை வைத்தும் குற்றவாளிகள் பயன்படுத்திய மகேந்திரா பிக்கப் வாகனத்தின் எண்ணை காவலர்கள் வாட்ஸ்அப் குழுவில் பதிவு செய்து… அக்குழு உதவியுடன் மதுரை மாவட்டம் விளாம்பட்டியைச் சேர்ந்த காசு பாண்டி (32) என்பவரை கைது செய்து விசாரித்ததில் தன்னுடன் தனது நண்பர்கள் ராசு, குமரேசன், மற்றும் நவநீதன் ஆகியவர்கள் கூட்டாக சேர்ந்து லாரியை பின் தொடர்ந்து வந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் லாரியில் ஏறி மறைத்து வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் தாங்கள் வந்த பிக்கப் வாகனத்தில் ஏற்றி சென்றதாகவும் ஒப்புக்கொண்டார்.
மேலும் தலைமறைவாக இருந்த நவநீத கிருஷ்ணன் என்பவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து திருட்டுக்கு பயன்படுத்திய மகேந்திரா பிக்கப் வாகனத்தையும் பீடி பண்டல்களையும் கைபற்றினர் பிறகு இவர்கள் அனைவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்…
நிருபர் ராம்