Mon. Oct 7th, 2024

கடல் நீரை குடிநீராக்க பேரணி | அக்‌ஷய் ஸ்ரீ சாய் தியான சபையினர். |

மே,03-2019…

அக்‌ஷய் ஸ்ரீ சாய் தியான சபையினர் ” கடல் நீரை குடிநீராக மாற்ற வேண்டி ” விழிப்புணர்வு பேரணி!

சென்னை மெரினா கடற்கரையில் வில்வம் வேம்பு துளசி ஆகியவற்றின் நீரைக் கொண்டு கடல் நீரை குடிநீராக்கும் முயற்சியில் இந்து அமைப்புகள் ஈடுபட்டனர்.

உலக வெப்பமயமாதல் காரணமாக உலகமெங்கும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வில்வம் வேம்பு துளசி ஆகிய நீர்களை கடல் நீருடன் நினைத்து கழிக்கும் நீரை குடிக்கும் நீராக மாற்ற சுவாமி சாய் இரவிச்சந்திரன் தலைமையில் பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் முயற்சித்தனர்.

இதுகுறித்து சாய் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலகமெங்கிலும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் குடிநீர் பஞ்சம் அகோரத்தனமாக உள்ளது . எனவே நமது முன்னோர்கள் பயன்படுத்திய பழங்கால முறையான வில்வம், வேம்பு, துளசி ஆகியவற்றை கொண்டு கரிக்கும் நீரை குடிநீராக்கும் ஒரு முயற்சியை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்த முயற்சியை நாங்கள் 10 ஆண்டுகளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சிவராத்திரி நாட்களில் கிணறு உள்ள நீர் நிலைகளில் அந்த வில்வம் வேம்பு துளசி நீரை ஊற்றி பரிசோதித்து இருக்கிறோம். முதலில் கடல் நீரை துணி துவைக்கும் நீராகவும் குளிப்பதற்கு ஏற்றவையாகவும் மாற்றி பின்னர் குடிப்பதற்கு உகந்த நீராக மாற்ற முயற்சிகள் செய்து வருகிறோம். மேலும் ரேஷன் கடைகளில் மூலிகை பொருட்களை தருவதன் மூலம் மக்களே அந்த மூலிகை பொருட்களை உப்பு நீரில் ஒரு குடிநீராக மாற்றி கொள்ள முடியும். நல்ல செயல்களுக்கு அரசு உதவி செய்யும் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆகையால் இது போன்ற நல்ல செயல்களையும் அரசு ஆதரிக்க வேண்டும்.ஜக்கி வாசுதேவ்,நித்தியாணந்தா போன்றோர் இத்திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து விவேகானந்தர் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரை பேரணியாக சென்று மெரினா கடலில் வில்வம், வேம்பு, துளசி மூலிகைகள் கலந்த நீரை கரைத்தனர். இந்த பேரணியில் சுவாமி சாய்ஜி, தொழிலதிபர் கீதா உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நமது நிருபர்..