இயக்குனர்களின் உணர்வை பிரதிபலிக்கும் இயக்(கூ)னர் குறும்படம்…
மே, 3 – 2019…
இயக்குனர்களின் உணர்வை பிரதிபலிக்கும், விடியல் கிடைக்குமா என துடிக்கும் கதைக்களம் தான் இயக்(கூ)னர் குறும்படம்…
இயக்குனர்களாக திரைத்துறை வரலாற்றில் தடம்பதித்த, தடம்பதித்து கொண்டிருக்கின்ற, தடம்பதிக்க போகின்ற இயக்குனர்களுக்கு இந்த குறும்படம் சமர்ப்பணம். அறிவையும், கனவையும், சுமந்துக்கொண்டு ஏறாத படிகள் இல்லை, தட்டாத கதவுகள் இல்லை, வறுமை,அவமானம், புறக்கணிப்பு என்ற நிலையில் ஏதாவது ஒரு விடியல் கிடைக்காதா ? என தன்னுடைய சாதனைகள் மலராதா என்ற ஏக்கதோடு தன்னுடைய உறவுகளையும், நட்பையும் அணுஅணுவாக கரைத்துக்கொண்டு இருக்கின்ற சமுதாயத்தில் அதிகம் வளைந்து(கூன் போல) ஒரு இயக்குனர் (இயக்கூன)ரின் கதைகளம் இது.
இதில் இராஜ.கதிரவன், லீலா.ராவணன், சத்தியராஜ், ரமணி, பெருமாள், நடேசன் மற்றும் பலர் நடிகர்களாக களமிறங்குகின்றனர் இந்த படத்தை சக்ஷ்டி பட நிறுவனம் தயாரிக்கின்றது. பிரபல இயக்குனர் லீலா.இராவணன் இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ்குமார் வடிவமைப்பில், எழுத்தாளர் நடேசன் கார்க்கி கதைவசனம் எழுதுகிறார். இதற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைப்பெற்று கொண்டிருக்கிறது. தொழிளாளர் தினமான மே 1 அன்று இக்குறும்படம் வெளியிடப்படுகிறது.
நமது நிருபர்