Sun. Oct 6th, 2024

பாலியல், சமூக அவலங்களை சித்தரிக்கும் குறும்படம் | சவபுரி |

மே, 03 – 2019…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அரக்கர்களின் பாலியல் வன்முறைகள்
மற்றும் சமூக அவலங்களை சித்தரிக்கும் குறும்படம் (சவபுரி).

சென்னை: பெண்களுக்கு எதிராக இன்றைய காலகட்டத்தில் பாலியல் கொடுமைகள் மற்றும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள் அதிகம் கொண்ட தமிழ் நாட்டில் பெண்களுக்கு எதிராக காம கொடூர மிருகங்களால் கொடுமை படுத்தப்பட்டு வருகிறார்கள். பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழக மக்களையே திரும்பி பார்க்க வைத்தது. இது போன்று நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன .

இந்த மாதிரியான பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அவற்றிலிருந்து தீர்வு காணும் வகையில் “சவபுரி” என்ற குறும்படம் உருவாக்கப்டுகிறது . இந்த படத்தை முப்பதுக்கும் மேற்பட்ட திரைக்காவியங்களைப் படம்பிடித்த கேமராமேன் “ஷம்ஷாது” படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் இந்த படத்தின் கதைக்களம் முற்றிலும் பெண்களை முதன்மையாக கொண்டதால் இயக்குனர் படத்துக்காக பல கதாநாயகிகளை தேர்வு செய்து இறுதியில் “யானை மேலே குதிரை சவாரி , படத்தில் கதாநாயகியாக நடித்த “அர்ச்சனா சிங்” இந்த படத்தின் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த குறும்படத்தை இயக்குனர் லீலா இராவணன் இயக்குகிறார். இரண்டு முறை சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற தனசீலன் படத்திற்கு இசை அமைக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்ஷ்டி நிறுவனம் தயாரிக்கின்றது . ”சவபுரி” படத்தின் ஓரளவு பணிகள் முடிவடைந்த நிலையில் படத்தை விரைவில் மிகப்பெரிய இணையத்தில் வெளியிட படகுழுவினர் முடிவெடுத்துள்ளனர்.