தங்கத்தில் ஆன SHAVING Kit | விமான நிலையத்தில் பறிமுதல் |
சென்னை விமான நிலையத்தில் 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்க பிஸ்கட்களை சுங்க இலாகா அதிகாரிகள் இலங்கையை சேர்ந்த இலங்கேஸ்வரன்/60 என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர் அப்போது உள்ளாடைக்குள் ரூபாய் 9 லட்சத்தி 30 ஆயிரம் மதிப்புள்ள 283 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்த 17-தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் துபாயில் இருந்து சென்னை வந்த தஞ்சாவூரை சேர்ந்த மகாலிங்கம்/61 என்பவர் 4 தங்கத்தால் ஆன முகத்தை சேவிங் செய்யும் கருவிகள் (Shaving Kit ) மற்றும் சிறிய ஸ்டெண்ட்களும் இருந்தது அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் தங்க கம்பிகளை வைத்து இருந்ததையும் கண்டு பிடித்தனர் ரூபாய் 12 லட்சத்தி 81- ஆயிரம் மதிப்புள்ள 390 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் இவர்கள் இருவரிடம் இருந்து மட்டும் 22 லட்சத்தி 11 ஆயிரம் மதிப்புள்ள 673 கிராம் தங்கத்தை கைப்பற்றியதாகவும் இது தொடர்பாக மேலும் இருவரிடமும் விசாரணை நடத்தி வருவதாக தகவல்…
நமது நிருபர்