LKS நகைக்கடையில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு | அதிகாரிகள் சோதனை |

மே, 02-2019
அண்ணாநகரில் உள்ள பிரபல நகைக்கடையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை.
சென்னை அண்ணாநகர் 10 வது பிரதான சாலையில் உள்ள எல்கேஎஸ் (LKS) கோல்டு ஹவுஸ் என்ற கடையில் ஜிஎஸ்டி சேவை வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி அலுவலக அதிகாரிகள் 11க்கும் மேற்பட்டவர்கள் இந்த சோதனையில் ஈடுப்பட்டு வருவதாகவும் மேலும் காலை 10-மணிக்கு துவங்கிய இந்த சோதனை மாலை வரை தொடர்கிறது ஜிஎஸ்டி வரி எய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைப்பெறுவதாக தெரியவருகிறது.
சோதனையின் முடிவிலே இந்த கடையில் வரி எய்ப்பு செய்யப்பட்டுள்ளதா என்ற முழு விபரம் தெரியவரும் என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்..
நமது நிருபர்