Thu. Mar 13th, 2025

கணவனை கரண்டியால் அடித்த மனைவி..!!

மே 2, 2019…

அயனாவரம் பகுதியில் உள்ள பொன்னுவேல் புரத்தில் கொத்தனாராக இருக்கும் கார்த்தி என்பவர் தனது மனைவி தனலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

அந்த பகுதிக்கு அருகே உள்ள தனது சித்தியின் பழக்கடைக்கு தனலட்சுமி அடிக்கடி சென்றுவிடுவதால் வீட்டில் சரியான நேரத்திற்கு சமையல் செய்யாமல் இருந்தது குறித்து கார்த்திக் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது தனலட்சுமியின் சித்தி அபிராமியும் அங்கு வந்துள்ளார். இதனையடுத்து கரண்டியால் கார்த்திக்கின் நெற்றியிலும், இடது கையிலும் மனைவி தனலட்சுமி அடித்துள்ளார் இதில் கார்த்திக்கு காயம் ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து மனைவி தனலட்சுமி மற்றும் அவரது சித்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது…

நமது நிருபர்