காய்கறி ஏற்றி வந்த மினிவேன் மோதி | நடந்து சென்ற பெண் பலி |

அண்ணா நகர் ரவுண்டானா அருகில் சாலையை கடந்த பெண் மீது மினி வேன் மோதியதில் பெண் சம்பவ இடத்தில் பலி.
சென்னை அண்ணா நகர் ரவுண்டானா இரண்டாவது அவென்யூ அருகில் இன்று அதிகாலை 5 மணி அளவில் 55 வயது மதிக்கதக்க பெண் மீது அந்த வழியாக கோயம்பேட்டில் இருந்து காய்கறி ஏற்றி வந்த மகேந்திரா மினி வேன் அதிவேகமாக வந்து பெண் மீது மோதியதில் பெண் தூக்கி வீசப்பட்டார் இதில் அந்த பெண்ணுக்கு தலையில் பலத்த அடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தகவல் அறிந்த அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து போன பெண் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதிவேகமாக வாகனத்தை ஓட்டி பெண் மீது மோதிய திருவான்மியூர் சேர்ந்த ஓட்டுனர் சதிஷ் வயது 32 என்பவரை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர் மேலும் விபத்தில் இறந்து போன பெண் யார்? என எந்த தகவலும் தெரியாமல் அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் விசாரணை…
நமது நிருபர்