சிக்னலில் 4 கார்களை நொறுக்கிய சிமென்ட கான்க்ரீட் கலவை வாகனம்…

கிண்டி சிக்னலில் நின்று கொண்டிருந்த
4 கார்களை நொறுக்கிய சிமென்ட கான்க்ரீட் கலவை வாகனம்
அண்ணா சாலையில் இருந்து கிண்டி நோக்கி வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தபோது கிண்டி நட்சத்திர ஓட்டல் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததும் வாகனங்கள் நின்றன அப்போது அந்த வழியாக கட்டுப்பாட்டை இழந்தபடி வேகமாக வந்த தனியார் சிமெண்ட் கான்கிரீட் கலவை வாகனம் சிக்னளில் நின்றுக்கொண்டிருந்த 4 கார்கள் மீது வேகமாக மோதியது அதில் நான்கு கார்களும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் கார்களின் இருபுறமும் நொறுங்கியது உள்ளே இருந்தவர்களுக்கு சிறுகாயஙகள் ஏற்ப்பட்டது இந்த திடீர் கார்கள் மோதலால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது உடனே அங்கு வந்த கிண்டி போக்குவரத்து போலீசார் சிமென்ட் கான்க்ரிட் கலவை வாகன டிரைவரை கைது செய்து போக்குவரத்தினை காவல்துறையினர் சீர்செய்தனர் இதனால் அங்கு 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது…
நமது நிருபர்