Thu. Mar 13th, 2025

அண்ணாநகரில் பெண்ணை தாக்கி செல்போன் பறிப்பு.

வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் சென்னை அண்ணாநகரில் தனியார் குடிமைப்பணி பயிற்சி மையத்தில் படித்து வரும் ராமநாதபுரம் சேர்ந்த சவுந்தர்யா/20 இவர் தற்போது சென்னையில் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வருகிறார் நேற்று பயிற்சி மையத்தில் இருந்து விடுதிக்கு அண்ணா நகர் வழியாக நடந்து சென்றபோது பைக்கில் வந்த வழிபறி கொள்ளையர்கள் பெண்ணை தாக்கி செல்போனை பறித்து சென்றனர்.

இது குறித்து சவுந்தர்யா திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போலீசார் வழிப்பறி கொள்ளயர்களை தேடி வருகின்றனர்…

நமது நிருபர்