Sun. Oct 6th, 2024

சென்னையில் 5 கிர்கிஸ்தான் ராணுவ பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி..

பரங்கிமலை ராணுவ மையத்தில் 5 கிர்கிஸ்தான் ராணுவ பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி..

ஆலந்தூர், ஏப் – 30, பரங்கிமலையில் உள்ள இளம் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு மட்டுமின்றி சிசிலிஸ், உகாண்டா, மாலதீவு, ஆப்கானிஸ்தான், பூடான், பிஜூ போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த 411 ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, அதன்படி கிர்கிஸ்தான் நாட்டை சார்ந்த 5 பெண் இராணுவ அதிகாரிகள் இங்கு பயிற்சி பெறுவதற்காக பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு வந்துள்ளனர்.

இவர்களுக்கு 3 வார குறுகிய கால பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கிய இந்த பயிற்சியானது… வருகின்ற மே மாதம் 4 ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்த பயிற்சியின் போது ,5.56 எம்.எம் இலகு ரக எந்திர துப்பாக்கிகள் மற்றும் ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் கையாள்வது ஆயுதங்களை கையாளுவது, குதிரைபயிற்சி, நீச்சல் பயிற்சி, மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி, தலைமை மாண்பு, சூழ்நிலைகளை எதிர்கொள்ளுதல் , உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது., இதுகுறுத்து ராணிவ பயிற்சியாளரும் கேப்டனுமான ராதிகாஜெகி கூறும்போது”
தற்போது, பயிற்சி பெற்று வரும் 5 கிர்கிஸ்த்தான் பெண் இராணுவ பெண் அதிகாரிகள் கடந்த 7 முதல் 17 ஆண்டுகள் வரை ராணுவ அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள் அந்த நாட்டு ராணுவத்தில் லெப்டினன்ட் முதல் லெப்டினன்ட கர்னல் வரையிலான பதவிகளை வகித்து வருகின்றனர். இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் பயிற்சி முறைகளை அறிந்து அவர் கூறினார்.
பயிற்சிகளை மோற்க்கொள்வதற்காகவும் அவர் இங்கே வந்துள்ளதாகவும், இவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்…

நமது நிருபர்