அமைச்சர் பெஞ்சமினின் அண்ணன் மகன் அட்டுழியம் |
அமைச்சர் பெஞ்சமினின் அண்ணன் மகன் அட்டுழியம் |
அமைச்சர் பெஞ்சமினின் அண்ணன் ஜார்ஜ் அவர்களின் மகன் பிரசாந்த் என்பவர் நேற்று மாலை 6 மணியளவில் குடிபோதையில் அயனம்பாக்கம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அன்பரசன் என்பவரின் மகன் தமிழரசன் என்ற அப்பாவி இளைஞர் ஒருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார் பாதிகப்பட்ட இளைஞர் தமிழரசன் ராஜீவ் காந்தி அரசுபொது மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் தொடர்பாக பகுதிமக்கள் அனைவரும் அமைச்சரின் அண்ணன் மகன் மீது புகார் அளித்து இதுவரை திருவேற்காடு காவல் ஆய்வாளர் சண்முகம் பிச்சை அவர்கள் இதுதொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்ய மறுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அமைச்சர் பெஞ்சமினின் அண்ணன் மகன் தினமும் அப்பகுதியில் குடிபோதையில் ஈடுபட்டு வருவதுடன் தொடர்ந்து பொது மக்களுக்கு இடையூறு செய்து வருவதாகவும் இதுபற்றி அப்பகுதி காவல் நிலையத்தில் எப்போது புகார் அளித்தாலும் அந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் விரைவில் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாகவும் வருகிற மே 23ம் தேதி முதல் அமைச்சர் பெஞ்சமின் குடும்பத்தினர்கள் இப்பகுதியில் செய்யும் அட்டுழியம் நிச்சயம் முடிவுக்கு வரும் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்…
ச.விமலேஷ்வரன்