கற்காலம் முதல் கலர்ஃபுல் காலம் வரை காசு, பணம், துட்டு, மணி கண்காட்சி
கற்காலம் முதல் கலர்ஃபுல் காலம் வரை காசு, பணம், துட்டு, மணி கண்காட்சி
திருச்சியில் உலகப் பணத்தாள்கள் கண்காட்சி 2019 ஜீன் 14, 15,16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உலகப் பணத்தாள்கள் வரலாற்றினை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் கற்காலம் முதல் கலர்ஃபுல் காலம் வரை காசு, துட்டு , மணி என பணத்தின் பரிமாண வளர்ச்சியினை உலகப் பணத்தாள்கள் , நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் பழம் பொருட்கள் கண்காட்சி மூலம் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், பெமினா ஹோட்டல் அருகே உள்ள ஸ்ரீநிவாசா ஹாலில் 2019 ஜுன் 14 ,15 , 16 தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சியினை நடத்துகிறது. பார்வையாளர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம்.
காசு, பணத்தாள்கள், காசோலை, வரைவோலை, கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, பண வடிவ மற்ற பிட்காய்ன்கள் என பணம் பல வடிவமாற்றங்களில் பயன்பாட்டில் உள்ளது.
கற்காலத்தில் பணம் என்ற வார்த்தை இல்லை. பண்டமாற்று முறை தான் இருந்தது. தற்போதும் பழைய துணிக்கு பாத்திரங்கள் வழங்கும் பண்டமாற்று முறை உள்ளது குறிப்பிடத்தக்கது
பழங்காலத்தில் குன்றிமணி, சோழினைக் கூட நாணயங்கலாக பயன் படுத்தி உள்ளனர். இந்தியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இருந்து முத்திரை காசுகள் புழக்கத்தில் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சங்க காலத்தில் தென்னிந்தியாவை ஆண்ட அரசர்களான சேரர், சோழர், பாண்டியர் தங்கள் சின்னங்களான வில், மீன், புலி உள்ளிட்டவற்றை முத்திரைக் காசாக அச்சிட்டனர். சங்க காலத்திற்கு பின் தமிழ் எழுத்துக்களுடன் பல்லவர் காலத்து காசுகளும் அதன் பின் வெளிவந்த காசுகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
அர்ஜென்டினா, அர்மேனியா, ஆஸ்டிரியா, அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பல்கேரியா, பஹ்ரைன், புரூனே, போஸ்னியா , பகாமாஸ், பங்களாதேஷ், பூட்டான், பெல்ஜியம் , பிரேசில், பர்படாஸ், செக்கோஸ்லோவாகியா, கேமன் தீவு, சைனா, கேப் வெர்டி, கனடா, சைப்ரஸ், கோஸ்டோரிகா, செக் குடியரசு , டென்மார்க், கிழக்கு கரீபியன் தீவு, இங்கிலாந்து, ஜெர்மணி, எத்தியோப்பியா, எகிப்து, பல்க் தீவு, பின்லாந்து, பிரான்ஸ், பிஜு தீவு, கேம்பியா, கிரீஸ், ஜெர்சினி, ஹாங்காங், ஹோண்டுராஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இந்தோனேசியா, ஈராக், இஸ்ரேல், இத்தாலி, ஈரான், ஐஸ்லாந்து, ஜப்பான் , ஜமைக்கா , ஜோர்டான், ஜெர்சி, கஜஹஸ்திஸ்தான், குவைத் , லெபனான், லித்துவேனியா , முராக்கோ, மெக்சிகோ, மாலதீவு, மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, ஓமன், போர்ச்சிகல், பனாமா , பிலிப்பைன்ஸ், கத்தார், ரஷ்யா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, சிரியா, தாய்லாந்து, உகாண்டா உள்ளிட்ட 200 உலக நாடுகளின் பணத்தாள்கள் , நாணயங்கள் மற்றும் தபால் தலைகளை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி அதன் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாராம் குறித்து எடுத்துரைக்கின்றனர்.
நாணயக் கண்காட்சியில் பிரிட்டிஷ் இந்தியா நாணயங்களில் வில்லியம் IV (1830-1837) , ராணி விட்டோரியா (1834-1901) , எட்வர்டு VII (1901-1910), ஜார்ஜ் V (1911-1936) , ஜார்ஜ் VI (1936- 1947), உள்ளிட்ட ஆண்டுகளில் வெளியான 1/12, 1/2 , 1, 2, 4,8 அணா, பைஸ், காலணா, ஓட்டை ஒரு பைசா, அரையனா உள்ளிட்ட மதிப்பிலான செம்பு, வெள்ளி, பித்தளை, நிக்கல் உள்ளிட்ட உலோகங்களில் வட்டம், சதுரம், அறுகோண வடிவங்களில் உள்ள நாணயங்கள் காட்சி படுத்தப்படுகின்றன.
குடியரசு இந்தியா பொது பயன்பாடு நாணயங்களும், நினைவார்த்த நாணயங்களும் காட்சிப்படுத்தப் படுகின்றன.
சோமாலியா நாட்டில் வெளியிட்ட கிடார் இசைக்கருவி, கார், விலங்குகள் வடிவிலான நாணயங்கள் காட்சிப்படுத்தப் படுகின்றன.
மலேசிய நாடு வெளியிட்ட உலகிலேயே பெரிய பணத்தாள் காட்சிப்படுத்தப் படுகின்றன.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகர், பொருளாளர் அப்துல்அஜீஸ், முகமது சுபேர், பாண்டி, கமலக்கண்ணன், சந்திரசேகரன் உள்ளிட்ட நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்துள்ளனர்.
பள்ளி, கல்லூரி, ஆய்வு மாணவர்கள், பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள், பழம் பொருட்கள் சேகரிப்போர் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.
உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள், பழங்காலப் பொருட்கள் சேகரிப்பாளர்கள் தங்களது சேகரிப்பினை காட்சிப்படுத்தி விளக்க உள்ளார்கள் என திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.