பஸ் நடத்துனரை தாக்கி கீழே தள்ளிய | பரோட்டா மாஸ்டர் கைது |
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் கண்டக்டரை தாக்கிய பரோட்டா மாஸ்டர் கைது.சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த செல்வகுமார்/25 இவர் பரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறார் இவர் நேற்று மாலை 15F மாநகர பேருந்தில் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் ஏறி சிறிது தூரம் பேருந்தில் படிக்கட்டு வழியாக பயணம் செய்தார் பேருந்து கண்டக்டர் திருவள்ளூர் பள்ளிப்பட்டு சேர்ந்த தனசிங்/42 இவர் மாநகரப் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த செல்வகுமாரை மேல வர சொன்னார் அதற்கு செல்வகுமார் மேலே வர முடியாது என கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திடீரான செல்வகுமார் கண்டக்டர் தனசிங்கை தாக்கி மாநகர பேருந்தில் இருந்து கீழே தள்ளினார் இதில் கண்டக்டருக்கு கால் முட்டியில் பலத்த படுகாயம் ஏற்பட்டது உடனே கோயம்பேடு காவல் நிலைத்தில் பொது மக்கள் தகவல் சொன்னார்கள் சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் ராஜ்குமார் கண்டக்டரை தாக்கிய செல்வகுமாரை கைது செய்தனர் மேலும் கைது செய்த பரோட்ட மாஸ்டர் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்