வாலிபரை வழிமறித்து கத்தியால் வெட்டி | செல்போன் பறிப்பு | இளைஞர் கைது |
நெற்குன்றம் பகுதியில் வாலிபரை வழிமறித்து அரிவாளால் வெட்டி செல்போன் பறிப்பு செல்போன் மற்றும் பட்டக்கத்தி பறிமுதல் செய்தனர் நெற்குன்றம் சக்தி.நகர் சேர்ந்த மைக்கல் ஜான்சன்/22 இவர் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார் நேற்று அதிகாலை 2- மணியளவில் தன்னுடைய வேலையை முடித்து விட்டு கோயம்பேடு மார்கெட் வழியாக இருசக்கர வாகனத்தில் வரும்போது அந்த வழியாக வந்த மைக்கல் ஜான்சன் என்பவரை வழிமறித்து பட்டக்கத்தியை காட்டி செல்போன் மற்றும் பணத்தை கேட்டு உள்ளார் மைக்கல் ஜான்சன் தரமுடியாது என்று மறுக்கவே கையில் வைத்து இருந்த பட்டகத்தியால் அவரை தலையில் வெட்டியதில் 10,000. மதிக்கதக்க கைபேசி (Cell phone) கொடுத்து விட்டு தப்பித்து வந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ரத்த வெள்ளத்தில் மைக்கல் ஜான்சன் புகார் கொடுத்தார் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை போலீசார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மைக்கல் ஜான்சன் தலையில் 15தையல் போடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் தீபக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் நேற்று மாலை முகப்பேர் மெயின் ரோடு எம்ஜிஆர்.நகர் பகுதியில் சுற்றிதிரிந்த வாலிபரை கைது செய்து விசாரணை செய்ததில் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த நரசிம்மன்/19 என்பவர் தான் ஜான்சனை என்பவரை தலையில் வெட்டி செல்போன் பறித்து சென்றது தெரிய வந்தது அவரிடம் இருந்த பட்டக்கத்தி, செல்போல் பறிமுதல் செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர் மேலும் நரசிம்மன் மீது கடந்த வருடம் செல்போன் பறிப்பு வழக்கு கோயம்பேடு காவல் நிலையத்தில் உள்ளது என்று குறிப்பிடத்தக்கது…
நமது நிருபர்