Fri. Dec 20th, 2024

மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி | சென்னை முகப்பேரில் |

சென்னை முகப்பேரில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நாராயண மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்/55 பெயிண்டராக பணியாற்றும் இவர் இன்று காலை கிழக்கு முகப்பேர் இளங்கோ தெருவில் புதியதாக கட்டி வரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார் அப்பொழுது முதல் தளத்தில் உள்ள பால்கனியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலையோரம் சென்ற மின் கம்பியின் மீது கை உரசியதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்..

இது குறித்து ஜெஜெ.நகர் காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு வந்த ஜெஜெ.நகர் போலீசார் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் வழக்கு பதிவு செய்த ஜெஜெ.நகர் போலீசார் வீட்டின் உரிமையாளரை பிடித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…

நமது நிருபர்