கடைகளில் வசூல் வேட்டை | போலி போலீஸ் இருவர் கைது |
கடைகளில் வசூல் வேட்டை | போலி போலீசார் இருவர் கைது |
சென்னை அமைந்தகரை பகுதியில் போலீஸ் என கூறி கடைகளில் பணம் வசூல் செய்த இருவர் கைது போலீஸ் என கூறி ஒட்டல், டீ கடை,
டிபன் கடை என பல கடைகளில் பணம் வசூல் செய்து மிரட்டி வருவதாக அமைந்தகரை போலீசாருக்கு தகவல் வந்தது.
ஆய்வாளர் பெருந்துறை முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர் நேற்று மாலை 6 மணி அளவில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கஞ்சா அடித்து கொண்டு இருப்பதாக தகவல் வந்தது சம்பவ இடத்துக்கு ரோந்து வாகனத்தில் விரைந்து செல்லும் போது அங்கு இருந்த இரு வாலிபர்கள் போலீசை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றனர் உடனே ரோந்து வாகனத்தில் வந்த உதவி ஆய்வாளர் பன்னீர் செல்வம், காவலர் மூர்த்தி, ஜெயப்ரகாஷ் ஆகியோர் வாலிபர்களை விரட்டி மடக்கி பிடித்தனர் கைது செய்தவர்களிடம் விசாரணை செய்ததில் பூந்தமல்லி சேர்ந்த சதீஷ்(எ)கல்லறை சதீஷ்/29,சென்னை சூளைமேடு சேர்ந்த மதிவாணன்/33 இருவர் அமைந்தகரை பகுதியில் கடைகளில் பணம் வசூல் செய்து சொகுசாக இருந்தது தெரியவந்தது இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் சதீஷ் (எ) கல்லறை சதீஷ் மீது திருவேற்காடு, பூந்தமல்லி,கேகே.நகர்,
குன்றத்தூர், காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது மதிவாணன் மீது அடிதடி வழக்கு கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…
நமது நிருபர்