இலங்கையில் குண்டு வைத்தேன் | போதை ஆசாமி கைது |
சென்னை கோயம்பேடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு குடிபோதையில் இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன் என்று உளறிய போதை ஆசாமி கைது.
சென்னை கோயம்பேடு வள்ளிமை சாலை பெரியார் நகர் ஆழ்வார் நகர் சேர்ந்த Michael bready/43 இவர் நேற்று குடிபோதையில் வீட்டில் இருந்து தொலைபேசி மூலமாக கோயம்பேடு காவல் கட்டுபாட்டு அறைக்கு இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன் என்றும் கோயம்பேடு மேட்டு குப்பம் பகுதியில் குண்டு வைத்துள்ளேன் என்றும் முடிந்தால் தடுத்து கொள்ளுங்கள் என்று கூறி இனணப்பைத் துண்டித்து விட்டார்.
காவல் கட்டுபாட்டு அறைக்கு வந்த தொலைபேசி நம்பரை வைத்து விசாரணை செய்ததில் Michael bready என தெரிய வந்தது இந்த சம்பவம் குறித்து எல்லா இடங்களிலும் உஷார் நிலையில் இருந்தனர் குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையம் எக்மோர் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 300 போலீசார் குவிக்க பட்டனர் இந்நிலையில் கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தீபக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர் இந்நிலையில் இரண்டு நாட்களாக வீட்டிற்கு வராத Michael bready நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார் வீட்டிற்கு வந்துள்ளார் என்று காவல் நிலையத்திற்கு தகவல் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தனிப்படை உதவி ஆய்வாளர் பூபதிராஜ் michael bready என்பவரை மடக்கி பிடித்தார் கைது செய்த Michael bready என்பவரை கோயம்பேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்