Thu. Mar 13th, 2025

ஆளுநர் மாளிகை எங்களின் குடும்ப சொத்து | மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம் விசாரணை |

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு எதிரே 45 வயது மதிக்க தக்க ஒருவர் நின்று கொண்டு… இந்த மாளிகை எங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது, இதில் உள்ளவர்கள் உடனே காலி செய்ய வேண்டும் என உரத்த குரலில் கத்திக்கொண்டிருந்தார். அதை தொடர்ந்து அவரை ஆளுநர் மாளிகை பாதுகாப்பு படை வீரர்கள் பலமுறை விரட்டியும்… அவர் கிளம்பி செல்லாத்தால் அவர்கள் கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் அந்த நபரை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரிததபோது அவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த பாபு (45) என்றும், மேலும் அவரது செய்கைகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் செய்வது போல் இருந்ததால், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்…