Fri. Dec 20th, 2024

50₹ ஆயிரம் மற்றும் iPhone லஞ்சம் | காப்பாற்றப்படும் காவல் ஆய்வாளர் |

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மற்றும் ஐபோனை iPhone லஞ்சமாக பெற்ற குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் மாதவரத்தை சேர்ந்த சரவணன் நில பிரச்சனை காரணமாக கூடுதல் ஆணையர் தினகரனிடம் புகார் அளித்துள்ளார் புகாரை விசாரித்த தினகரன் புகார் சம்பந்தப்பட்ட இடமான மாதவரம் காவல் நிலையத்தில் உள்ளதால் மாதவரம் காவல் குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் புகார் அளிக்க கூறி அனுப்பி வைத்துள்ளார் புகார் அளித்தவர் மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷிடம் புகார் அளிக்க புகாரை விசாரித்து நடவடிக்கை எடுத்த ஆய்வாளர் சுரேஷ் லஞ்சமாக 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு ஐபோன் லஞ்சமாக பெற்றுள்ளார்…

புகார் அளித்த சரவணன் கூடுதல் ஆணையரிடம் நன்றி தெரிவிக்க சென்ற போது தான் லஞ்சம் கொடுத்த விசயத்தை தெரிவித்துள்ளார் உடனடியாக wirelessல் தகவல் தெரிவித்ததாக தகவல் தினகரன் அரைமணி நேரத்திற்குள் லஞ்சமாக வாங்கிய பணத்தையும் ஐபோனையும் திருப்பித்தர சொல்லியும் இந்த தகவல் தெரியாத ஆய்வாளர் மெத்தனமாக இருந்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த கூடுதல் ஆணையர் தினகரன் புகார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு லஞ்சப் பணத்தை திரும்ப கொடுக்கச் சொல்லியும் கொடுக்காத குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்காமல் இடமாற்றம் செய்து இருப்பது அவரை காப்பாற்று செயலாகவே ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

நமது நிருபர்