Sat. Dec 21st, 2024

சென்னை பாடியில் தந்தையை | குத்திக் கொன்ற மகன் கைது |

சென்னை ஜெஜெ.நகரில் குடி போதையில் தந்தையை குத்திக் கொன்ற மகன் கைது..

சென்னை பாடி மதுரவீரர் கலைவாணர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்/60
பழ வியாபாரம் செய்து வருகிறார் இவரது மகன் சூரியபிரகாஷ்/26 குடிப்பழக்கம் உடைய இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து பெற்றோருடன் தகராறு செய்து வந்தார். பிறகு நேற்று இரவு வழக்கம் போல் தமிழ்செல்வம் அவருடைய மனைவி , சூரியபிரகாஷ், குமரேன், பிரியா நான்கு பேரும் பழகடையை மூடி விட்டு வீட்டிற்கு வந்தனர் இரவு 1:30 மணி அளவில் வழக்கம் போல் குடிபோதையில் வந்த சூரிய பிரகாஷ் தந்தை தமிழ்செல்வத்திடம் இடம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தையை குத்திவிட்டு சூர்யா பிரகாஷ் தலைமறைவானார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தமிழ்செல்வனை அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து ஜெஜெ.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழ்ச்செல்வனை பிரேத பரிசோதனைக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவாக இருந்த சூரியபிரகாசம் என்பவர் மீது 302, 506, ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் சுரேந்திரன் தலைமையில் தேடி வந்த இந்த நிலையில் கோயம்பேட்டில் தலைமறைவாக இருந்த சூரியபிரகாஷ் என்பவர் போலீசை பார்த்ததும் தப்பி செல்ல பார்த்தார் உடனே உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் காவலர்கள் துரத்தி சென்று கைது செய்தனர் கைது செய்த சூரியபிரகாஷ் இடம் ஜெஜெ.நகர் போலீசார் விசாரனை மேற் கொண்டு வருகின்றனர்.மேலும் குடிபோதையில் மகனே தந்தை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

நமது நிருபர்