Sat. Dec 21st, 2024

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது |

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது |

உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளில் வீடு புகுந்து திருடுதல் இருசக்கர வாகனங்களை திருடுவது போன்ற பொதுமக்களை மிரட்டி வந்த திருடனை பிடிக்க தேனி மாவட்ட எஸ்பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் உத்தமபாளையம் DSP வீரபாண்டி தலைமையில் தனிப்படை அமைத்து திருடனை தேடி வந்த நிலையில் 19ம் தேதி உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தை திருடியதாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஆய்வாளர் முருகன், கம்பம் கோம்பை ரோட்டில் வசிக்கும் மணி என்பவரின் மகன் விவேக்/28, என்பவரை பிடித்து சந்தேகத்தின் பேரின் விசாரணை செய்ததில் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார் விசாரணையில் மேலும் கம்பம் பகுதியில் கோவில் உண்டியலை உடைத்தது அங்கும் வாகனத் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்ததால் இவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்..

நமது நிருபர்