வெந்நீர் போட எலக்ட்ரிக் அடுப்பை ON செய்த பெண் பலி…!
சென்னை தண்டையார்பேட்டை, தண்டையார்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் காட்வின். இவருடைய மனைவி லூனா பெட்ரிசியா (45). இவர், செவிலியராக அப்பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
நேற்று (ஏப்ரல் 20) காலை லூனா, தனது வீட்டில், குளிப்பதற்காக வெந்நீர் போட மின்சார அடுப்பின் ஸ்விட்சை போட்டுள்ளார். அப்பொழுது அதில் எற்பட்ட மின் கசிவு.. அவர் உடல் முழுவதும் பாய்ந்து தூக்கி எறிப்பட்டுள்ளார்..
இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் லூனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்க காசிமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது.
அதை தொடர்ந்து லூனாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நமது நிருபர்