சென்னை தனியார் அலுவலகத்தில் 19 லட்சம் கொள்ளை…
சென்னை அரும்பாக்கம் தனியார் நிறுவன அலுவலகத்தில் 19 இலட்சம் கொள்ளை.
சென்னை, அரும்பாக்கம் பூந்தமல்லி சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் சின்டேக்ஸ் டேங்க் விற்பனை நிறுவனம் நடத்தி வருபவர் விஜயன் (48). இவருக்கு சொந்தமான நிலத்தை… விற்ற பணம் 20 இலட்சத்தை கடந்த
14ஆம் தேதி அலுவலகத்தில் வைத்து பூட்டி வைத்துள்ளார்.
இந்நிலையில்… நேற்று அவரது அலுவகத்தில் இருந்த மேஜை லாக்கரின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். இது குறித்து அரும்பாக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அரும்பாக்கம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அலுவலகத்தில் வேலை செய்பவர்களில் யாராவது எடுத்து சென்றார்களா.? அல்லது கொள்ளையர்கள் திட்டமிட்டு எடுத்து சென்றுள்ளனாரா.?
என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கொள்ளை நடந்தது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அரும்பாக்கம் பகுதியில் தொடர்ச்சியாக இதுபோன்ற கொள்ளை சம்பங்கள் அரங்கேறி வருவதற்கு… அப்பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் காவலர்கால் ரோந்து பணி வராமல் இருப்பதே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு…
நமது நிருபர்