Sat. Dec 21st, 2024

மணப்பாக்கம் பேருந்து நிறுத்தம் மீது லாரி மோதி | மூவர் பலி டிரைவர் தலைமறைவு |

மணப்பாக்கம் பேருந்து நிறுத்தம் மீது லாரி மோதி சம்பவ இடத்தில் 3 பேர் பலி.

தப்பியோடிய லாரி டிரைவர் தலைமறைவு..

சென்னை, ராமாபுரம் மணப்பாக்கம் அருகே மணல் லோடு ஏற்றிக் கொண்டு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தின் அருகே சென்று கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தின் உள் புகுந்தது. இந்த சம்பவத்தில் பேருந்தி நிறுத்தம் முற்றிலும் உடைத்து பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது விழுந்தது இதில் உடல் நசுங்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தனர்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் பளு தூக்கும் இயந்திரத்தின் உதவியுடன் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவர் மது போதையில் வாகனத்தை ஒட்டினரா..? என்கின்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

நமது நிருபர்