சென்னையில் கஞ்சா விற்பனை செய்த | 9 பேரை கைது செய்த போலீசார் |
சென்னை டி.பி.சத்திரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கஞ்சா விற்பனை செய்த 9 பேர் கைது. ஒரு கிலோ கஞ்சா மற்றும் ஒரு கார் உட்பட இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்து டிபி.சத்திரம் போலீசார் விசாரணை.
சென்னை டிபி.சத்திரம் 5 அடுக்கு மாடியில் உள்ள மேல் தளத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக டிபி.சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து…, சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறிய பொட்டலமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த டிபி.சத்திரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீபன் (எ) குணசேகரன் வயது 26, கருப்பு (எ) ஞானசேகரன் (24). சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கீர்த்திவாசன் (21), அதே பகுதியே சேர்ந்த சரத்குமார் (21), டிபி.சத்திரம் சேர்ந்த தமிழரசன் (19), செந்தில்குமார் (24), வினோத்குமார் (27), கவணன் (31), வினோத் (27) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் கார், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும் டி.பி.சத்திரம் அடுக்குமாடி பகுதியில் உள்ள வீடுகளில் 100 க்கு மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
நமது நிருபர்