Sat. Dec 21st, 2024

பள்ளி மாணவனின் கைவரிசை |

சென்னை கோயம்பேடு அருகை ஆட்டோவில் உள்ள பெட்டியை உடைத்து திருட முயன்ற 16 வயது பள்ளி மாணவன் கைது.

சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மார்ச் 19ஆம் தேதி இரவு ஒரு ஆட்டோவில் இருந்த பெட்டியை உடைத்து திருடும் போது… பொதுமக்கள் பள்ளி மாணவனை மடக்கி பிடித்து, சரமாரியாக தர்மஅடி கொடுத்து… கோயம்பேடு போலீசாரும் இடம் ஒப்படைத்தனர்.!

கோயம்பேடு போலீசார் நடத்திய விசாரணையில்… போரூரில் செல்போன் பறித்துவிட்டு, கோயம்பேட்டில் திருட வந்தது தெரியவந்தது.
பள்ளி மாணவனிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த பள்ளி மாணவன் எந்த எந்த இடத்தில் செல்போன் கைவரிசை காட்டி உள்ளார் என்று விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…

நமது நிருபர்