கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட | பொதுமக்கள் மீது போலீசார் தடியடி |
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட | பொதுமக்கள் மீது போலீசார் தடியடி |
கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள கம்பம்,தேனி மதுரை மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் சுமார் இரண்டு மணி நேரமாக இயக்காத்தால் பயணிகள் அவதி 200க்கும் மேற்பட்ட பயணிகள் பிற ஊர்களுக்கு செல்லும் பேரூந்துக்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆணையர் சுதாகர், உதவி ஆணையர் ஜெயராமன், ஆய்வாளர் ராஜ்குமார், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் ஆத்திரமடைந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை திடீரென்று தடியடி நடத்தியதில் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் இதில் சிலருக்கு கீழே விழுந்து உடலில் காயத்துடன் கலைந்து சென்றனர் பயந்து போன போலீசார் பாதுகாப்பு அதிகப்படுத்தி பயணிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பஸ் டிப்போவில் உள்ள அதிகாரிகளிடம் பேசி தற்போது பொதுமக்களுக்கு தேவையான பேருந்துகளை சீர் செய்து வருகின்றனர்..
மேலும் போலீசார் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தடியடி நடத்தியதில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது…
நமது நிருபர்